1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 25 ஜூன் 2017 (09:34 IST)

பாஸ்போர்ட்டிலும் ஹிந்தி திணிப்பு: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டம்!!

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பாஸ்போர்ட்டில் ஹிந்தியை திணிப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். 


 
 
இனி பாஸ்போர்ட் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்தார்.
 
இது குறித்து ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அதில் அவர் கூறியதாவது, ஹிந்தி பேசாத மாநிலங்களில் வாழும் மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் இல்லாமல் செயல்படும் மத்திய பாஜ அரசு, ஹிந்தி திணிப்பில் எல்லையில்லா ஆர்வம் காட்டுவது வேதனைக்குரியது.
 
மத்திய அரசு அலுவலகங்களில் திட்டமிட்டு நடக்கும் ஹிந்தி திணிப்பு, மத்திய அரசு பணியில் சேர விரும்புவோருக்கு ஹிந்தி கட்டாயம், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஹிந்திக்கு முதலிடம் என ஹிந்தி திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர நாட்டில் எங்களுக்கு வேறு பணியே இல்லை என்பது போல மத்திய பாஜ அரசு செயல்படுகிறது.
 
தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதும், தமிழக உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுவதும், தமிழகம் போன்ற தேசப்பற்று மிக்க மக்கள் வாழும் மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஜவின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவளித்து வந்ததும் ஹிந்தியில் பாஸ்போர்ட், என்ற அறிவிப்பு தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
 
ஆகவே, ஹிந்தியில் பாஸ்போர்ட் என்ற அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.