1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 27 ஜனவரி 2015 (11:40 IST)

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: இன்றுடன் முடிவடைகிறது வேட்புமனு தாக்கல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதனால் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் இல்லாத காலியான தொகுதியாக ஸ்ரீரங்கம் அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 17 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
 
அதிமுக சார்பில் வளர்மதியும், திமுக சார்பில் ஆனந்த்தும், பாஜக சார்பில் சுப்ரமணியும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக க.அண்ணாதுரையும் போட்டியிடுகின்றனர். ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது.