தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைவரும் ஒரே குரலில் பேசி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தாருங்கள் என குரல் எழுப்பி வந்தவர்கள் தற்போது தடையை மீறு ஜல்லிக்கட்டு நடத்துவோம் என கூறி வருகின்றனர்.
சினிமா நட்சத்திரங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். குறிப்பாக நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது வலுவான ஆதரவை கூறி மௌன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து அதனை நடத்தியும் காட்டினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அதே போல நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். ஜல்லிக்கட்டு தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள கவிதை ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
சமீப காலமாக நடிகை ஸ்ரீப்ரியா டுவிட்டரில் ஆக்டிவாக செயல்படுகிறார். தனியார் தமிழ் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்சனைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டு நிகழ்ச்சிகளை கடுமையாக அவர் விமர்சித்தது பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றது.
— sripriya (@sripriya) January 12, 2017
இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான அவரது இந்த கவிதையும் பெரும் வரவேற்பை பெற்று வைரலாக பரவி வருகிறது.