நாகை மீனவர்கள் 8 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு


Ashok| Last Modified செவ்வாய், 5 ஜனவரி 2016 (21:17 IST)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 8 பேரை விடுவிக்க, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று முன்தினம் இரவு முல்லைத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகு, இலங்கை மீனவர்களின் படகின் மீது மோதியதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடல் சீற்றத்தால்தான் படகு மோதியது என்று தெரியவந்ததையடுத்து 8 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில், இலங்கையின், வுவுனியாவில் இருக்கும் நாகை மீனவர்கள் நாளை விமானம் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :