வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ashok
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (16:25 IST)

காவல்நிலையத்தில் உயிரிழந்த இலங்கை தமிழர் குறித்து விசாரணை- மாஜிஸ்ட்ரேட் உத்தரவு

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இலங்கை தமிழர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்ய ஆலந்தூர் மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

ஈழத்தமிழர் மோகனை போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக கூறி   விசாரணைக்காக சென்னை மாநகர குற்றப் பிரிவு போலீசார் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாரடைப்பால்  உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர் மோகன் சாவில்மர்மம் இருப்பதாகக் கூறி விடுதலை சிறுத்தை கட்சினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். மேலும் பட இடங்களில் தமிழ் அமைப்பினர் மற்றும் ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் போரட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இலங்கை தமிழர் மோகன் காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். மேலும் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் இலங்கை தமிழர் மோனின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர்.