செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By caston
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (13:05 IST)

தொடரும் அட்டூழியம்: இலங்கை கடற்படையினரால் 16 தமிழக மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினத்தை சார்ந்த 16 மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மீனவர் சங்க தலைவர் எஸ்.எமிரெட் மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்தனர் என தெரிவித்தார்.  கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் யாழ் மாவட்டம் கான்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதற்கிடையில் செல்வராஜ் என்ற மீனவர் நடுக்கடலில் மயங்கி இறந்துள்ளார். அவர் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என மீன்வளத் துறை உதவிப் இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் நேற்று இரவு இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கட்ச்ச தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் காயமடைந்தனர் 20 மீனவர்களின் வலைகள் இதில் சேதமடைந்தன. மேலும் 440 படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கல் வீசி இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.