வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 மார்ச் 2017 (14:35 IST)

தமிழக சட்டசபை வரை பறந்த சிட்டுக்குருவி!!

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக் குருவிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


 
 
செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக பறவைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 
 
தமிழக சட்டசபை மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடியது. அப்போது மறைந்த உறுப்பின்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. 
 
அப்போது அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். 
 
சிட்டுக்குருவிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை பாதுகாக்க தமிழக அரசு நடவடிவக்கை எடுக்குமா என்று திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். 
 
இதனை அடுத்து வானூர் கழுவெளியில் பறவைகள் சரணாலயம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலம் குறித்தும் கேள்விகள் எழுப்பட்டது.