Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியின் மகள் நீதிமன்றத்தை நாடினார்: விவாகரத்து கோரி மனு!

ரஜினியின் மகள் நீதிமன்றத்தை நாடினார்: விவாகரத்து கோரி மனு!

வெள்ளி, 23 டிசம்பர் 2016 (12:30 IST)

Widgets Magazine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் இன்று மனு செய்துள்ளார்.


 
 
ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யாவுக்கும் தொழிலதிபரான அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சௌந்தர்யாவுக்கு அவரது கணவர் அஸ்வின் ராம்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 
கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் சௌந்தர்யாவும் அஸ்வினும் பிரிந்து வாழ்ந்து வந்தது வெளியுலகத்துக்கு தெரியவர இது பரபரப்பாக பேசப்பட்டது. இதனை செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்தார் செளந்தர்யா ரஜினிகாந்த்.
 
இதனையடுத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் விலங்குகள் நலவாரிய தூதுவராக நியமிக்கப்பட்டார். தற்போது விஐபி இரண்டாம் பாகத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் கணவர் அஸ்வினிடமிருந்து விவாகரத்து வேண்டும் என செளந்தர்யா ரஜினிகாந்த் மனு கொடுத்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

’ஆர்யா’வுக்கு ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாதா? - ட்விட்டரில் கிழித்த தமிழர்கள்

நடிகர் ஆர்யா ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் ...

news

பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி தற்கொலை

ஆந்திராவை சேர்ந்த காமெடி நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ...

news

தாயுடன் கள்ளத்தொடர்பு; மகளுக்கு தூண்டில்: தீர்த்துக்கட்டிய விபரீதம்!

வேலூரில் தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த ஒருவர் அவரது மகள் மீதும் ஆசைப்பட்டதால் அவரை ...

news

சசிகலாவை மீண்டும் சீண்டும் சசிகலா புஷ்பா: பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி என அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா ...

Widgets Magazine Widgets Magazine