சொத்துத் தகராறில் தந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்

murder
Last Modified சனி, 19 மே 2018 (10:53 IST)
சங்ககிரியில் சொத்துத் தகராறு காரணமாக தந்தையை அவரது மகனே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காளிப்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி(70). இவரது மனைவி குழந்தையம்மாள். இவர்களுக்கு சந்திரசேகர், ரமேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். குழந்தையம்மாள் கடந்த ஓராண்டிற்கு முன்பு இறந்துவிட்டார்.
 
இந்நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு, சந்திரசேகர் தனது தந்தையிடம் நச்சரித்து வந்துள்ளார். ஆனால் சின்னசாமி சொத்தை பிரித்துக் கொடுக்கவில்லை.
 
சம்பவ தினத்தன்று சின்னசாமிக்கும் அவரது மகன் சந்திரசேகருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தனது தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். 
 
இதனையடுத்து வேலை முடிந்த பிறகு சின்னசாமியின் இளையமகன் ரமேஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள சந்திரசேகரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்துக்காக மகன் தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :