1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (10:57 IST)

தமிழகப் பட்ஜெட் தாக்கல் – எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி

தமிழக பட்ஜெட் இப்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் என வாசித்து வருகிறார்.


 

  • 1.நடப்பாண்டில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு  
  • 2.ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
  • 3.பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.28,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • 4.ஜெர்மன் வங்கி உதவியுடன் 2000 பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும். முதல் கட்டமாக சென்னை, கோவையில் 500 பேருந்துகள் இயக்கப்படும்
  • 5.மாற்று திறனாளிகளுக்கு 3000 ஸ்கூட்டர் விலையில்லாமல் வழங்கப்படும்
  • 6.புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்
  • 7.மின் பகிர்மானக் கழகத்திற்கு 22,815 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • 8.தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளுக்கு 319 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • 9.ஊரக வளர்ச்சித்துறைக்கு 18,273 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • 10.வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை ஒழிப்பு பாலின சமத்துவம் போன்ற புதுமை முயற்சி திட்டத்துக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
  • 11.தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
  • 12.பயிர் காப்பீட்டிற்கு ரூ621 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • 13.ரூ 84 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு 2000 பம்புசெட்டுகள்  வழங்கப்படும்.
  • 14.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்
  • 15.சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு தமிழக அரசு ரூ.40,941 கோடி நிர்வாக அனுமதி அளித்து உள்ளது.
  • 16.கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவாக்கப்படும்
  • 17.ஹார்வேர்டு போன்ற மற்ற சர்வதேச பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்
  • 18.மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2,681 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • 19.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜப்பான் வங்கியிடம் இருந்து ரூ.20,196 கோடி நிதிப் பெறப்பட்டுள்ளது.