Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் ஆர்யாவிடம் கவிஞர் சினேகன் கேள்வி!

நடிகர் ஆர்யாவிடம் கவிஞர் சினேகன் கேள்வி!


Caston| Last Modified சனி, 14 ஜனவரி 2017 (15:47 IST)
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பில் உள்ள நடிகர், நடிகைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். நடிகர் ஆர்யா ஜல்லிக்கட்டு என்றால் என்ன? என டுவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு தமிழர்கள் கடுமையான கண்டனங்களையும் கோபமான பதிலையும் பதிவு செய்தனர்.

 
 
பின்னர் ஆர்யா தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத்தான் அந்த பதிவை செய்ததாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார்.
 
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் ஆர்யா பீட்டா அமைப்பைச் சேர்ந்தவர், என எதிராக கோஷம் எழுப்பினார். பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் அல்ல என ஆர்யா கூறியிருந்தார். இதனையடுத்து ஆர்யாவின் கருத்துக்கு கவிஞர் சினேகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதில், ஜல்லிக்கட்டிற்கும், பீட்டாவிற்கும் தொடர்பு இல்லை என்றால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடக்கும் பிரச்சனைகளை அவர்களிடம் ஆர்யா எடுத்து கூறாலாமே, ஏன் மறுக்கிறீர்கள்.
 
தமிழர்கள் உதவியால் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதனால் காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்குங்கள் என கோரிக்கை வைக்கலாமே. நீங்கள் தமிழ்நாட்டின் தண்ணீர், சாப்பாடு என அனைத்தையும் சாப்பிட்டிருக்கிறீர்களே என கூறினார் சினேகன்.
 
மேலும் தற்போது இவர்களைப் போன்ற நடிகர்கள் பீட்டா அமைப்பிடம் சில வருடங்களுக்கு விளம்பர மாடலாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் பீட்டா அமைப்பையும் எதிர்க்க முடியாமல், தமிழகத்திலும் ஒன்றும் செய்ய முடியாமல் முழிக்கின்றனர் என சினேகன் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :