Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆயிரம் பாம்புகளுக்கு மேல் பிடித்த நபர் மர்ம மரணம் - கடலூரில் பரிதாபம்

வியாழன், 16 மார்ச் 2017 (12:58 IST)

Widgets Magazine

கடலூர் மாவட்டத்தில் ஆயிரம் பாம்புகளுக்கும் மேல் பிடித்து, பாம்பு மனிதன் என பெயர் எடுத்த பூனம் சந்த் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.


 

 
வடநாட்டில் இருந்து வந்து, தமிழகத்தின் கடலூரில் வாழ்ந்து வருபவர் பூனம்சந்த். பாம்புகளை உயிருடன் பிடிப்பதில் இவர் கில்லாடி என்பதால், அந்த பகுதிகளில் வீடுகளில் பாம்புகள் புகுந்து விட்டால் இவரைத்தான் அழைப்பார்கள். அந்த பகுதியில் இதுவரை ஆயிரம் பாம்புகளுக்கும் மேல் இவர் உயிருடன் பிடித்து சாதனை படைத்துள்ளார். பாம்புகளை கொல்லக் கூடாது என்பது பூனம்சந்தின் கொள்கையாகும். எனவே, பாம்புகளை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்து விட்டு, வீட்டிற்கு திரும்பிய அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் கூறிவிட்டார்.
 
பாம்பு கடித்து அவர் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் செய்தி பரவியது. ஆனால், அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என தற்போது தெரியவந்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எக்ஸ்பிரஸ் வேகத்தில் பட்ஜெட்டை படித்த ஜெயகுமார்

தமிழக சட்டப்பேரவையில் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் ...

news

ஸ்டாலின் உத்தரவு: அமைதியான திமுக எம்.எல்.ஏ.க்கள்

தமிழக சட்டசபையில் வரும் 2017-18ம் ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் ...

news

தினகரன் வெற்றி பெற்றால் நாட்டை விட்டே வெளியேறுவேன் - எழுத்தாளர் சாரு நிவேதிதா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. ...

news

சட்டசபையில் சசிகலா பெயர்; ஸ்டாலின் - செங்கோட்டையன் நேருக்கு நேர் வாக்குவாதம்

சொத்து குவுப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி ...

Widgets Magazine Widgets Magazine