வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (08:42 IST)

ரப்பர் தோட்டத்தில் தம்பதியரின் எலும்பு கூடு: அதிர்ச்சியில் கிராம மக்கள்

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ரப்பர் தோட்டத்தில் மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது தோட்ட உரிமையாளரின் மகன் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


 
 
ஆலம்பாறை பகுதியில் ரப்பர் கட்டிட வேலைக்கு குழி தோண்டும் போது அருகில் உள்ள தோட்டத்தில் எலும்பு கூடு கிடப்பதை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை விரைந்து அப்பகுதிக்கு வந்தனர்.
 
காவல்துறை நடத்திய விசாரணையில் எலும்பு கூடாக கிடந்தவர் அந்த ரப்பர் தோட்ட உரிமையாளரின் மகன் செல்வராஜ் என தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் செல்வராஜையும், அவரது மனைவி சரஸ்வதியையும் காணவில்லை என கிராம மக்கள் கூறியுள்ளனர்.
 
அவர்களின் 13 வயது மகள் ஒரு கான்வெண்டில் தங்கி படிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தம்பதியரின் மகளிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
 
மேலும், சொத்தை அபகரிக்க உறவினர்கள் யாராவது செல்வராஜ் தம்பதியரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
 
இவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதால் எலும்பு கூட்டை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.