வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 14 செப்டம்பர் 2014 (14:29 IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: பேராசிரியை உள்பட 6 பேர் பலி

திண்டுக்கல் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பேராசிரியை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
திருச்சி மாவட்டம், சிறுமாயன்குடியை சேர்ந்தவர் வெங்கடாசலம். அவரது மனைவி கீதா (35). தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஸ்ரீராம்(14), பாலாஜி(11) ஆகிய மகன்கள் உள்ளனர்.
 
அவர்களது மூத்த மகன் ஸ்ரீராம் கொடைக்கானல் மலை பண்ணைக்காடு பகுதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அவனை பார்ப்பதற்காக வெங்கடாசலம், அவரது மனைவி கீதா, இளைய மகன் பாலாஜி, உறவினர்கள் சாந்தி(42), பானு ஆகியோர் காரில் இன்று அதிகாலை புறப்பட்டனர். காரை டிரைவர் மோகன்(35) என்பவர் ஓட்டினார்.
 
கார் காலை 6.30 மணியளவில் திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் பஞ்சராகி நின்ற லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் சிறுவன் பாலாஜி, பேராசிரியை கீதா உள்பட  6 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடமதுரை காவல்துறையினர், பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.