Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர் மர்ம மரணம்! கொலையா? தற்கொலையா?


sivalingam| Last Modified திங்கள், 10 ஜூலை 2017 (06:28 IST)
பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் திருச்சி வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்டக்காரர் திருச்சி கல்குவாரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டில் கடந்த சில வருடங்களக புதுக்கோட்டை ஆவூரை அடுத்த சாத்தனூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தோட்ட வேலை செய்து வந்தார். 
 
இவர் கடந்த 3 நாள்களாக ஆறுமுகம் பணிக்கு வரவில்லை. தகவல் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில் அவருடைய பிணம் அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
 
உடனடியாக போலிசார் ஆறுமுகம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கல்குவாரியில் தவறி விழுந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? போன்ற கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டு தொழிலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் அப்பகுதிமக்கள் சிவகார்த்திகேயன் வீட்டு முன்  கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 


இதில் மேலும் படிக்கவும் :