வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ashok
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (15:19 IST)

சிவாஜி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு

மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றி புதிதாக அமைய உள்ள சிவாஜி  மணிமண்டபத்தில் வைக்க தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி சிலை திமுக ஆட்சி காலத்தில் 2006 ஆம் ஆண்டு ஜீலை 21 ஆம் தேதி அவரது நினைவு நாள் அன்று திறந்து வைக்கப்பட்டது.
மெரினா கடற்கரை சாலையில் மகாத்மா காந்தியின் சிலைக்கு எதிரில், சிவாஜி சிலை  இருப்பதை எதிர்த்து 2007 ஆம் ஆண்டு நாகராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதை எதிர்த்து, 'சிவாஜி சிலையை அகற்றக் கூடாது' என, சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன், மறுசீராய்வு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக, அரசு முடிவெடுக்கும்படி, கடந்த ஆண்டு ஜனவரியில் உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கதா நிலையில் சிவாஜி  மணிமண்டபத்தில் வைக்க தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அப்பொழுது நீதிபதிகள் சிவாஜியின் சிலை இடமாற்றம் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வியை எழுப்பினர். அரசு தரப்பில் கால அவகாசம் கேட்தால் வரும் 16 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்