Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறுதாவூர் பங்களா; கொட நாடு எஸ்டேட்; 500 போலீசார் காவல் - அடுத்த சர்ச்சை


Murugan| Last Updated: புதன், 28 டிசம்பர் 2016 (18:12 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான சிறுதாவுர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகிய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 


 
ஜெயலலிதா மறைந்த பின்னரும் அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் விட்டின் அருகே சுமார் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அரசியல் அதிகாரம் எவரும் வசிக்காத அந்த வீட்டில் அமர்த்தப்பட்டிருக்கும் போலீசாரை வாபஸ் பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
அதனைத் தொடர்ந்து அங்கு காவல் காத்து வந்த 200 போலீசார் வாபஸ் பெறப்பட்டனர். தற்போது அங்கு தமிழக போலீசாருடன் சேர்ந்து ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. 
 
இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா, மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகிய இடங்களில் உளவுத்துறை மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் சுமார் 150 பேர் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :