வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2014 (15:01 IST)

சிறுசேரியில் பொறியாளர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை, சிறுசேரியில் பொறியாளர் உமா மகேஸ்வரி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுச்சேரி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணிணி மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்த உமா மகேஸ்வரி கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வளாகத்தில் இருந்து மாயமாகினார்.

பின்னர், பிப்ரவரி 22ஆம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு கால்வாயில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
 
இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது, அவர்கள் நடத்திய விசாரணையில், உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து, அப்பகுதியில் கட்டட வேலை செய்து வந்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த உஜ்ஜன் மண்டல், உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய 3 பேரும் சேர்ந்து உமா மகேஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர் என்பது தெரிய வந்தது.
 
இதனால் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்,  குற்றவாளிகள் 3 பேருக்குத் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.