Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா முதல்வராவதை தடுக்க கையெழுத்து இயக்கம் : இதுவரை 30 ஆயிரம் பேர் பதிவு

திங்கள், 6 பிப்ரவரி 2017 (11:40 IST)

Widgets Magazine

அதிமுக பொதுச்செயலாலளர் சசிகலா முதல்வராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.


 

 
நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சசிகலா முதல்வராவதை தடுக்க வேண்டும் என ஜானாதிபதிக்கு கோரிக்கை வைக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசன் என்பவர் சேஞ்ச் டாட் ஓர்ஜி (change. org) என்ற பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் அவர் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
 
ஏராளமான வழக்குகளில் சிக்கியுள்ள சசிகலா, மாநிலத்தின் முதல்வராகக் கூடாது என்பதே அவரின் கோரிக்கையாகும். இந்த இணையதளத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர் சசிகலாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஒரு வாரத்தில் தீர்ப்பு; சசி.யை காத்திருக்க வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது: ஆப்பு வைக்குமா மத்திய அரசு!

தமிழக முதல்வராக சசிகலாவை தேர்ந்தெடுப்பதாக நேற்று கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ...

news

தமிழகத்தை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது - ராமதாஸ் காட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்றால், தமிழர்களை ...

news

நடராஜனுக்கு உடல் நலக்குறைவு - அப்பல்லோவில் அனுமதி

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் அடுத்த முதல்வருமான வி.கே.சசிகலாவின் கணவர் நடராஜன், ...

news

சசிகலா முதல்வராவதில் சிக்கல்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு!

தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் தற்போது அவர் மீதான ...

Widgets Magazine Widgets Magazine