வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (16:41 IST)

சத்தத்துடன் சங்கு வெளிவரும் அதிசயம்: திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது

சத்தத்துடன் சங்கு வெளிவரும் அதிசயம்: திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது

திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சங்கு தீர்த்த புஷ்ப கரமேளா மற்றும் லட்சதீப விழா நாளை (2–ந் தேதி) நடக்கிறது.



கன்னிராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கும் ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் ஒரு முறை இக்கோவில் திருக்குளத்தில் இருந்து சத்தத்துடன் சங்கு வெளிவரும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். கோவில் குளத்தில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்குதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக மாமல்லபுரம், மதுராந்தகம், திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களின் வழியாக செல்லும் வகையில் 100 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 8 அவசர சிகிச்சை வாகனங்களும், இரண்டு இருசக்கர மருத்துவ வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முறையாக பதிவு செய்யப்பட்ட 40 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட பிறகே உணவினை வழங்க வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை எளிதாக கண்டறியும் வகையில் எட்டு காவல் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 40 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்விழாவினையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.