Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

துணை நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி நீக்கம்

துணை நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி நீக்கம்


Murugan| Last Updated: வெள்ளி, 4 நவம்பர் 2016 (13:35 IST)
சென்னையில் துணை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

 

 
சென்னை விருகம்பாக்கம், கம்பர் தெருவில் துணை நடிகர்களுக்கான ஏஜென்சி ஒன்று செயல்பட்டு வருகிறது. தினக்கூலி அடிப்படையில் துணை நடிகர்கள்  மற்றும் நடிகைகளை சினிமா படப்பிடிப்பிற்கு அந்த நிறுவனம் அனுப்பி வருகிறது.
 
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நிறுவனம் ஒரு புகார் அளித்தது. 
 
அந்த புகாரில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜோஸ்வா, ஏட்டுகளாக பணிபுரியும் குமரேசன், குமரன் மற்றும் மற்றொரு போலீஸ் அதிகாரி ராஜா ஆகியோர், அந்த நிறுவனத்தை சேர்ந்த துணை நடிகைகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாமுல் கேட்பதாகவும் கூறியிருந்தனர். 
 
மேலும், அவர்களின் ஆசைக்கு இணங்காவிடில், விபச்சார வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளி விடுவோம் என்று மிரட்டுவதாகவும் கூறியிருந்தனர். அந்த புகார் மனு கமிஷனர் உட்பட சில உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 
 
உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில், குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து, ஏட்டு குமரேசன்,குமரன்,  ராஜா,  சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்வா ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்து சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
 
இந்த விவகாரம் சென்னை போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :