Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சின்னம்மாவுக்கு தான் என் ஆதரவு; இரட்டை இலை தான் என் சின்னம்: நடிகர் செந்தில் பேட்டி!

சின்னம்மாவுக்கு தான் என் ஆதரவு; இரட்டை இலை தான் என் சின்னம்: நடிகர் செந்தில் பேட்டி!


Caston| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (14:50 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுகவினர் சசிகலாவை சின்னம்மா என அழைக்க ஆரம்பித்துள்ளனர். அவர் தான் அம்மாவின் வாரிசு என மூத்த நிர்வாகிகள் ஊடகங்களில் கூறி வருகின்றனர்.

 
 
முதலில் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தான் வர வேண்டும் என கூறிவந்தனர் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள். தற்போது அதிமுக அமைச்சர்கள் சிலர் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுக பேச்சாளரும் நடிகருமான செந்தில் அளித்துள்ள பேட்டியில் நான் அதிமுகவில் தான் நீடிக்கிறேன். சின்னம்மாவை சந்தித்து எனது ஆதரவை தெரிவித்துவிட்டு வந்தேன் என கூறினார்.
 
மேலும் ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே சின்னம்மா அம்மாவுடன் இருந்து வருகிறார். மக்களுக்கு நல்லது செய்தால் மட்டுமே வாக்களிப்பார்கள். புரட்சித்தலைவரை போலவே அம்மாவும் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார்கள். எப்போதுமே அதிமுகவுக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் தான் என் ஆதரவு என கூறினார் செந்தில்.


இதில் மேலும் படிக்கவும் :