வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: புதன், 15 மார்ச் 2017 (17:26 IST)

அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் அனைவரும் இவரை பாலோ பண்ணுங்கள் !

தமிழகத்தில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின்பு அ.தி.மு.க கட்சியானது சசிகலா அணியாகவும், ஒ.பன்னீர் செல்வம் அணியாகவும், தீபா அணியாகவும் மூன்றாகவும் சிதறிப்போய் உள்ள நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ க்களுக்கு ஆங்காங்கே மந்திரிகள் போல் பாதுகாப்பு மற்றும், வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு என்ற நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி எந்த வித பாதுகாப்புமின்றி மக்களோடு மக்களாக நின்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருவதோடு, மக்களிடையே குறைகளை கேட்டு அதை நிவர்த்தியும் செய்து வருகின்றார்.


 

தமிழக அளவில் கடந்த 2016 ம் வருடம் மே மாதம் சட்டசபை  தேர்தல் நடைபெற்றது. ஆனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு மட்டும் நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, சுமார் 23  ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். பின்பு மூன்றாக பிரிந்த அ.தி.மு.க வில் நாள் தோறும் ஒவ்வொரு குழப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் ஆங்காங்கே எம்.எல்.ஏ க்களுக்கு பாதுகாப்பு என்ற நிலையில் தனி ஆளாக மக்களோடு, மக்களாக மக்களிடையே வாக்களித்தற்காக நன்றி தெரிவித்ததோடு, ஆங்காங்கே மக்களின் பிரச்சினைகளையும் கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றார்.

கடந்த 10 தினங்களாக இவர் மேற்கொண்டிருக்கும் இந்த பயணம் இன்னும் 10 தினங்கள் நடைபெறும் என்று தெரிகின்றது. பரமத்தி, தென்னிலை, துக்காச்சி, அஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களிடையே நன்றி தெரிவித்தோடு, ஆங்காங்கே மக்களின் பிரச்சினைகளையும் கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றார். ஆக மீதமுள்ள 121 அ.தி.மு.க சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்களும் இவரை பாலோ பண்ணினால் போதும் என்கின்றனர் அ.தி.மு.க வினரும், நடுநிலையாளர்களும், இந்த ஆட்சி தொடரும் என்கின்றனர்.

ஆனால் அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை ஏதோ ! முற்றுகை ! எம்.எல்.ஏ வை சிறைபிடித்தல் ஏதாவது இருக்கின்றதா ? என்றால் எங்கேயும் இல்லை ! எம்.எல்.ஏ வுக்கு எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு என்றால் அதுவும் கிடையாது, தமிழக அளவில் செந்தில் பாலாஜி ஒரு மாற்றம் வாய்ந்தவர், மக்கள் மனதில் என்ன குறை என்று எப்படி யோசித்து எங்களுக்காகவே, எப்படி வாக்குகள் வாங்க, காலில் விழுந்தாரோ ? அதே போல், இப்போதும் பெரியவர்களை கண்டால் காலில் விழுவது ! அவர் இன்றும் செய்து வருகின்றார். எங்களை பொறுத்தவரை செந்தில் பாலாஜி எங்கள் வீட்டு பிள்ளை என்று அரவக்குறிச்சி தொகுதி புகளூர் பகுதியை அடுத்த செம்படாப்பாளையம் பகுதியை சார்ந்த மாரியம்மாள் என்ற பெண்மணி சுறுசுறுப்பாகவும், சுவையாகவும், கூறி முடித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க எம்.எல்.ஏ வை சிறைபிடிக்கின்றனர். பாதுகாப்புடன் உளா வருகின்றனர் என்றெல்லாம் கூறுவது கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை இல்லைங்க ! என்று சொல்லி முடித்தார்கள்.

-கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்