Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமைச்சரவை அறிவிப்பு: செந்தில் பாலாஜி ஏமாற்றம்

வியாழன், 16 பிப்ரவரி 2017 (16:56 IST)

Widgets Magazine

இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதில் ஓபிஎஸ் அமைச்சரவையில் இருந்தவர்களே அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிதாக செங்கோட்டையன் மட்டுமே அமைச்சராக பதவியேற்றார். பெரிதும் எதிர்பார்க்கபட்ட தங்கத்தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.அதிமுகவின் கடந்த 5அம தேதி சசிகலா புதிய சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டவுடன் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்க, இரண்டாக அதிமுக பிரிந்தது. பின்னர் சசிகலா சிறைக்கு சென்றதால் சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை ஆளுநரின் அறிவிப்பின் பேரில் இன்று மாலை பதவியேற்றது.

இதில் இரண்டே இரண்டு மாற்றங்கள் தவிர பழைய அமைச்சரவை அப்படியே தொடர்கிறது. முதலமைச்சராக ஓபிஎஸ் இருந்த இடத்தில அதே பொறுப்புகளுடன் எடப்பாடி முதல்வரானார். கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜனுக்கு பதில் செங்கோட்டையன் பொறுப்பேற்றார்.

கூடுதலாக எந்த மாற்றமும் செய்யாமல் அதே அமைச்சரவை தொடர்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓபிஎஸ்சுக்கு சவாலாக தேனி மாவட்டத்தில் களமிறங்கிய தங்கதமிழ் செல்வனுக்கும், கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்வுகளுக்கு பின்புலமாக இருந்த செந்தில் பாலாஜிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை


கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மீண்டும் கூவத்தூரில் அடைக்கப்படும் எம்.எல்.ஏக்கள் - பெரும்பான்மை நிரூபிக்கும் வரை அங்கேதான்..

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்கும் வரை அதிமுக எம்.எல்.ஏக்கள் ...

news

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சசிகலா காலி: காத்திருக்கும் ஓ.பி.எஸ்

ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பி விடுத்ததை அடுத்து ஓ.பி.எஸ் அணி டெல்லி ...

news

நீதி கேட்டு நெடும் பயணம் ; மக்களை சந்திக்கும் ஓ.பி.எஸ்..

மக்களிடம் நீதி கேட்பதற்காக ஓ.பி.எஸ் நெடும் பயணம் செல்ல இருப்பதாக செய்திகள் ...

news

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: 31 அமைச்சர்கள் இடம்பெற்றனர்!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ...

Widgets Magazine Widgets Magazine