வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2015 (12:07 IST)

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு : சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி 21 அடியை எட்டியதால், அதிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


 
 
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, தினமும் 64 கன அடி நீர், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திறக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போதைய நீர்வரத்து 9,100 கன அடியாக உள்ளது. அந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடி. பொதுவாக அந்த ஏரி 21 அடியை எட்டி விட்டாலே, பாதுகாப்பு கருதி  தண்ணீரை வெளியேற்றுவது வழக்கம்.
 
அதுபோலவே இப்போதும் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் போரூர், நந்தம்பாக்கம், ராமாபுரம்,கேகே நகர்,எம்ஜிஆர் நாகர், ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான்பேட்டை ஆகிய பகுதிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் அடையாற்றில் கலக்க உள்ளதால், அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
 
மேலும், அந்த ஏரி திறக்கப்படுவதால் குன்றத்தூரிலிருந்து ஸ்ரீபெரும்பத்தூர் வரையிலான சாலை துண்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த வழியே வரும் வானக ஓட்டிகள் சுமார் 40 கிலேமீட்டர் சுற்றிக் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த ஏரியிலிருந்து வெளிவந்த நீரின் காரணமாக, ஈக்காட்டுத்தாங்கல், காசி தியேட்டர் அருகே உள்ள தரைப்பாலத்தில் நின்றிருந்த ஒரு இளைஞர், நேற்று அடித்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து. அவரை தீயனைப்பு துறையினர் தேடி வரும் நிலையில், இப்போது இந்த ஏரியிலிருந்து 500 கன அடி அளவு நீர் திறக்கப்பட்டுள்ள விவகாரம், அந்த பகுதி மக்களுடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.