வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (22:43 IST)

கட்சி பணி செய்யும் இளைஞர்களுக்கு அரசு வேலை: அமைச்சர் செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு

ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும், இண்டர்வியூ அட்டெண்ட் செய்ய வேண்டும், டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதவேண்டும் என்றுதான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் இன்று பேசியபோது, '"இளைஞர்களே, கட்சிப் பணியாற்றும் உங்களுக்கு அரசு வேலைக்கு இன்டர்வியூ வந்தால் அதைப் பெற்றுத் தர கட்சி முழு முயற்சி செய்யும் , உற்சாகமாக கட்சிப் பணியாற்றுங்கள்" என்று கூறியுள்ளார்.
 
இந்த சர்ச்சை பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 'அப்புறம் எதுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம்? அந்த நேர்காணல் கடிதத்தையும் கட்சி அலுவலகத்தில் இருந்தே அனுப்பலாமே?' என்று ஒருவரும், அதாவது அரசுப் பணியானது கட்சியில் உள்ளோருக்கு மட்டுமே என்று சொல்லாமல் சொல்கிறார்?அவர்களக்காவது அப்பணியை இலவசமாக வழங்க வேணும்? என்று ஒருவரும், டி.என்.பி.எஸ்.சி பரீட்சை எதுவுமே எழுத வேண்டாமா? கட்சி கார்டு இருந்தால் போதுமா? என்று ஒருவரும் இதுகுறித்து டுவீட் செய்துள்ளனர். 
 
அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் கட்சி பணியாற்றினால் அரசு வேலை என்று ஓப்பனாக கூறியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன