1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2016 (15:55 IST)

சேகர் ரெட்டிக்கு ஜாமீன் கிடையாது: சிபிஐ நீதிமன்றம்

தொழிலதிபர் சேகர் ரெட்டி முறைகேடான பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


 

 
தொழிலதிபரும் தமிழக அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.144 கோடி பணமும், 177 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
கைது செய்யப்பட்டவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உடனே அவருக்கான ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சேகர் ரெட்டி வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.