வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (17:08 IST)

தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது - பீதியில் அமைச்சர்கள்

தொழிலதிபர் சேகர் ரெட்டியை சிபிஐ போலீசார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
வருமான வரித்துறையினர் கடந்த 8ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அண்ணாநகரில் உள்ள அவரது அலுவலகங்களில் அதிரடி சோதனை செய்தனர். 
 
அப்போது ரூ.105 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியது. அதில், பல கோடி,  புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 123 கிலோ தங்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சேகர் ரெட்டி தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.  இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியது.
 
அதன் பின் அந்த வழக்கு சி.பி.ஐ கை வசம் மாறியது. அதன் பின் கடந்த 4 நாட்களாக, வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப்பிரிவினர் (சிபிஐ) ஆகியோர் சேகர் ரெட்டி, அவரது நண்பர் ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் ஆடிட்டர் பிரேம் ஆகியோரிடம், சென்னையில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். மொத்தமாக சேகர் ரெட்டியிடமிருந்து ரூ.170 கோடி பணமும், 130 கிலோவிற்கும் அதிகமான தங்கம் மற்றும் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அதில், ரூ.33 கோடி, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தது சிபிஐ அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சேகர் ரெட்டியுடன் பல முக்கிய அமைச்சர்கள் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
 
விசாரணையின் முடிவில், சேகர் ரெட்டி, ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் ஆடிட்டர் பிரேம் ஆகியோரை சிபிஐ போலீசார் இன்று கைது செய்தனர். அவர்கள் மூவரையும் ஜனவரி 3ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்கப்படும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் அவர்கள் மூவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.