எம்.எல்.ஏ.க்களுடன் பன்னீர் தரப்பு பேச்சு வார்த்தை: தடுத்து நிறுத்த கார்டன் தரப்பு தீவிரம்


bala| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (14:27 IST)
22 எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை ஓ.பன்னீர்செல்வம்-நத்தம் விஸ்வநாதன் மகன்கள் களம் இறங்கினர்.

 


நேற்று முன்தினம் இரவு, சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அங்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கொடுத்த பேட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மோதல்தான் தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக வைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாக சசிகலா தரப்பு கூறி வந்தது. ஆனால், அதிலிருந்து 5 பேர் ஏற்கனவே ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர்.   
 
சட்டமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூப்பேன் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். எனவே, சசிகலா தலைமையில் அதிருப்தியில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் வருவார்கள் என்பது ஓ.பி.எஸ்-ஸின் நம்பிக்கை.

இந்நிலையில் சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவிக்க வேண்டி 127 எம்.எல்.ஏ.களை பேருந்து மூலம் அழைத்துச் சென்று ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஓபிஎஸ்ஸிற்கு ஆதரவு தெரிவிக்கும் மன நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் பொதுமக்கள் தரப்பில் சசிகலாவுக்கு எதிரான எண்ணங்களே உள்ளது. அதனை மீறி செயல்பட்டால் மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்றும் யோசனையில் உள்ளனராம்.

இதையடுத்து சசிகலாவின் பிடியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின்  மகன்கள்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பன்னீர் தரப்பினரின் முயற்சிகளை தடுப்பது குறித்து  கார்டன் வட்டாரம் தீவிர யோசனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :