கனமழை எதிரொலி: நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகள் விடுமுறை

Last Modified புதன், 14 மார்ச் 2018 (08:32 IST)
சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தாழ்வு அழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்திய நிலையில் கடந்த ஐந்து நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை

இந்த நிலையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இந்த இரு மாவட்டங்களுக்கு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் விடுமுறை என இரு மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் இந்த இரு மாவட்டங்களில் பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும், தேர்வு எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இரு மாவட்ட கலெக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.,

இந்த நிலையில் கனமழை காரணமாக தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் முத்துநகர் ரயில் தூத்துக்குடி மேலூரில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :