1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2015 (20:40 IST)

வகுப்பில் ஆபாசப் படம் பார்த்த பள்ளி மாணவிகள் இடைநீக்கம்

பள்ளியில் வகுப்பு நடக்கும்போது ஆபாசப் படம் பார்த்த பள்ளி மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
கோவையை அடுத்த சாய்பாபா காலனியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது கடைசி வரிசையில் அமர்ந்திருந்த மாணவிகள் சிலர் பாடத்தைக் கவனிக்காமல் சிரித்து பேசி அரட்டை அடித்துள்ளனர்.
 
இதனைக் கவனித்த ஆசிரியை அந்த மாணவிகளை அழைத்து விசாரித்தன் போது புத்தகத்திற்குள் விலையுயர்ந்த செல்போன்கள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஆசிரியை செல்போனை பறிமுதல் செய்தார். மாணவிகள் ஆசிரியையிடம் செல்போன்களை திருப்பி அளிக்கும்படி கெஞ்சியுள்ளனர்.
 
ஆனால் ஆசிரியை செல்போனை தலைமை ஆசிரியையிடம் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் செல்போனை கொடுங்கள் என மிரட்டியுள்ளனர். இதில், பயந்து போன ஆசிரியை மற்றொரு ஆசிரியையிடம் விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.
 
அப்போது, அந்த ஆசிரியை பறிமுதல் செய்த செல்போன்களை வாங்கிப் பார்த்துள்ளார். அதில் ஆபாச படங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தலைமை ஆசிரியையிடம் செல்போன்கள்கள் ஒப்படைக்கப்பட்டன. தலைமை ஆசிரியை செல்போனில் ஆபாச படம் பார்த்த 7 மாணவிகளும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளார்.
 
மேலும், அந்த மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவிகளுக்கு அறிவுரை தந்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 7 மாணவிகளுக்கு ஒருவாரம் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.