வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (17:33 IST)

கனமழை எச்சரிக்கை - 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


 


டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால் சென்னை மற்றும் புதுவையில் நாளை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகரும். 
 
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி வரும் 2-ஆம் தேதி காலை சென்னை வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையை கூறியுள்ளது.  இதற்கு நாடா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
 
இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு முதல் லேசான மழை ஆரம்பமாகும். நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
குறிப்பாக சென்னை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
 
எனவே, இதன் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் 2 நாட்கள் அதாவது டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல், பாண்டிச்சேரி மாநிலத்திலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.