Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. மரணம் குறித்த ரகசியத்தை உடைக்க சி.பி.ஐ. விசாரணை: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:09 IST)

Widgets Magazine

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


 

அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து அந்த மனுவில் கூறியுள்ள சசிகலா புஷ்பா, ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து எவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உடலை பதப்படுத்தியது போன்ற அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.

எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் அடிப்படை முகாந்திரம் இல்லையென எனத் தெரிவித்து, இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அங்கு இது தொடர்பான தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் மனுதாரர்களிடம் தெரிவித்துள்ளது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தோனியே எப்போதும் என் கேப்டன் - விராட் ஹோலி நெகிழ்ச்சி

ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இந்திய ...

news

முதலமைச்சர் பொறுப்பேற்க சசிகலா அவசரம்: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமா?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் ...

news

சின்னம்மா என்னமா இப்படி பண்ணுறீங்களேமா

காய்ந்துப்போன காவேரி, பொய்த்துப்போன வடகிழக்கு பருவமழை, வறண்டு போன நீர்நிலைகள், வானம் ...

news

சபாநாயகர் ஆகிறாரா ஓ.பன்னீர் செல்வம்? - சசிகலாவின் அதிரடி திட்டம்

தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் விரைவில் தமிழக சட்டசபையின் சபாநாயகராக ...

Widgets Magazine Widgets Magazine