1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (21:49 IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியா? இல்லையா? குழப்பத்திற்கு விடை சொல்லும் அரசியல் விமர்சகர்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளி என அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டியில் இறுதி தீர்ப்பு வந்தபோது ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவரது பெயர் நீக்கப்பட்டதாக அறிவித்தது.




இந்நிலையில் ஜெயலலிதாவும் இந்த வழக்கில் குற்றவாளிதான் என்றும், அதனால் அவரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கூறுகையில், 'சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதாவுக்கு (எ1) சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவில்லை, எனவே, சட்டப்படி அவரை உச்ச நீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கவில்லை.

மேலும், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான தண்டனை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது, ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான மேல்முறையீடே தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மீதான மேல்முறையீடே ரத்தானதால் அவர் குற்றவாளி இல்லை என்று ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.