1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 21 மே 2015 (17:53 IST)

குடிநீரில் நஞ்சைக் கலப்பதும், கழிவுநீரை கலப்பதும் ஒன்றே! - கருணாநிதி காட்டம்

குடிநீரில் நஞ்சைக் கலப்பது போல், கழிவு நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது மிகவும் கொடூரமான செயல் என்றும், இதை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து திமுக  தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்களும் காவிரி நீரைக் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர். குடிநீரில் நஞ்சைக் கலப்பது போல், கழிவு நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது மிகவும் கொடூரமான செயல்.
 
நதியாக இருந்த காவிரி வடிகால்வாயாக மாற, கர்நாடகமே காரணம். மாசு நிறைந்த நீரால் வேளாண்மை உற்பத்தி குறைந்துவிட்டது, மேட்டூர் அணையில் உள்ள நீரின் வண்ணமும் மாறிவிட்டது.
 
இந்த நீரைப் பருகுவதால் டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும்.
 
சுற்றுச்சூழலும், சுகாதாரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன” என்று தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் இளங்கோ எச்சரிக்கை செய்திருக்கிறார்.
 
மேலும், “சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்களும் காவிரி நீரைக் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர். குடிநீரில் நஞ்சைக் கலப்பது போல், கழிவு நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது மிகவும் கொடூரமான செயல்” என்று ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவரும், “தமிழக மக்கள் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தும் நீரில், கழிவு நீரை கர்நாடகம் கலப்பது தேச துரோகச் செயல்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமியும் தெரிவித்துள்ளதாக ஒரு நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
 
காவிரி நதி நீரில் கழிவு நீரைக் கலப்பதால், அதைக் குடிநீராகப் பயன்படுத்தும் தமிழக மக்களுக்கும், பாசனத்திற்குப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கும் நேர்ந்திடும் பேராபத்துகளைக் கருத்தில் கொண்டு, மனிதநேயமற்ற இந்தக் கொடுமையைக் கடுமையாகக் கண்டிப்பதற்கும், உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி, கழிவு நீர் அபாயத்தைத் தடுப்பதற்கும் தமிழக அரசு தாமதமின்றி முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.