சசிகலா கட்சி தொண்டர்களை சந்திக்க விரைவில் சுற்றுப்பயணம்


Abimukatheesh| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:09 IST)
ஜெயலலிதா மறைவுக்கு கூடிய முதல் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க சம்மதம் தெரிவித்தார். அதன்படி வரும் திங்கட்கிழமை .தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார் என்று தெரிகிறது. இதையடுத்து விரைவில் மாவட்ட ரீதியாக சென்று கட்சி தொண்டர்களை சந்திக்க திட்டமிடபட்டு உள்ளதாக தெரிகிறது.

 

 
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதன் முறையாக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தவியேற்க சம்மதம் தெரிவித்தார். அதன்படி வரும் திங்கட்கிழமை .தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார் என்று தெரிகிறது.
 
விரைவில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள சசிகலா, மாவட்டம் ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சித் தொண்டர்களை சந்திக்க திட்டமிடபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான சுற்றுப்பயணம் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :