வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 6 மார்ச் 2017 (09:48 IST)

சசிகலாவுக்கு தமிழக சிறை. 4 ஆண்டு எடப்பாடி ஆட்சி. சுப்பிரமணியன் சுவாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவருக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே கூறி வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அவர் மறைந்த பின்னர் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களையே கூறி வருவது மர்மமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

 




சசிகலா ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காவிட்டால்  அவர் மீது வழக்கு போடுவேன் என்று அறிவித்து தனது ஆதரவை சசிகலா தரப்புக்கு வெளிப்படுத்திய சுவாமி, தற்போது சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சட்ட ரீதியாக தண்டனை கிடைத்துவிட்டதால் இனி அவர் பெங்களூரு சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இதற்காக ஏன் தேவையில்லாமல் கர்நாடக அரசுக்கு தமிழக அரசு பணம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.

மேலும் ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி தனக்கு அவ்வளவாக தெரியது என்றும், மத்திய அரசில் விசாரித்த போது திமுக அரசுதான் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கியதாக தெரிகிறது என்றும் இன்று இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.