முதல்வரானவுடன் சசிகலாவின் முதல் கையெழுத்து டாஸ்மாக் மூடல்: பன்னீருக்கு குட் பை!

முதல்வரானவுடன் சசிகலாவின் முதல் கையெழுத்து டாஸ்மாக் மூடல்: பன்னீருக்கு குட் பை!


Caston| Last Updated: வெள்ளி, 30 டிசம்பர் 2016 (13:13 IST)
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்பார் என அரசியல் வட்டாரம் பரபரப்பாக பேசுகிறது. தற்போது முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு குட் பை சொல்லபோகிறார்களாம்.

 
 
பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலா நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
 
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்வு செய்து முதல்வராக பதவியேற்குமாறு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக பேசப்படுகிறது.
 
இந்த கோரிக்கையை சசிகலாவிடம் கொடுத்து அதன் பின்னர் அவர் முறைப்படி முதல்வராக பதவியேற்பார் என அதிமுகவினர் கூறுகின்றனர். மேலும் முதல்வராக பதவியேற்ற உடன் மக்கள் நம்பிக்கையை பெற முதல் கையெழுத்தாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கோப்பில் சசிகலா கையெழுத்திடுவார் எனவும் பேசப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :