எம்.ஜி.ஆர் இறந்த போது ஜெ.வை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை - அதிமுக எம்.எல்.ஏ தனியரசு


Murugan| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (11:00 IST)
எம்.ஜி.ஆர் இறந்து போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், சசிகலாவையும் போகப் போக அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என அதிமுக கொங்கு இளைஞர் பேரவை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான தனியரசு கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, தமிழகத்தின் முதல் அமைச்சராக வர வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது. கட்சி பொறுப்பு ஒருவரிடமும், ஆட்சி பொறுப்பு ஒருவரிடம் இருக்கக் கூடாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
ஆனாலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் சசிகலாவிற்கு எதிராக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், இதுபற்றி, அதிமுக எம்.எல்.ஏ தனியரசு ஒரு வார இதழுக்கு அளித்துள்ள போட்டியில் “சசிகலாவிற்கு எதிப்பு ஒன்றுமில்லை. ஜெ.விற்கு பின் கட்சியை வழிநடத்தும் திறமை அவருக்குதான் இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம்.  எம்.ஜி.ஆர் மறைந்த போது ஜெயலலிதாவை யாரும் எளிதில் ஏற்கவில்லை. தன்னுடைய திறம்பட்ட செயலால் அவர் தொண்டர்களையும், மக்களையும் கவர்ந்தார். அதுபோல், சசிகலாவும் அவரின் செயல்பாட்டால் அனைவரையும் கவர்ந்து மக்கள் விரும்பும் தலைவரக மாறுவார். அவர் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் மறைந்துவிடும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :