Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீல கலர் பார்டர் போட்ட வெள்ளை சேலையில் சசிகலா: சிறையில் எந்த சலுகையும் கிடையாது!

நீல கலர் பார்டர் போட்ட வெள்ளை சேலையில் சசிகலா: சிறையில் எந்த சலுகையும் கிடையாது!


Caston| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (09:33 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா கடந்த 15-ஆம் தேதி பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 
 
சிறையில் தனக்கு சிறப்பு சலுகைகள் வேண்டும் என சசிகலா தரப்பில் ஒரு லிஸ்ட் கொடுக்கப்பட்டது ஆனால் நீதிமன்றம் அதனை மறுத்துவிட்டது. மற்ற கைதிகள் நடத்தப்படுவது போல தான் சசிகலாவும் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
 
இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை அவர் மற்ற கைதிகளைப்போலவே நடத்தப்படுவதாக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி எச்.என்.சத்திய நாராயணா தெரிவித்துள்ளார்.
 
சசிகலாவுக்கும் இளவரசிக்கும் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளை போன்ற சாதாரண அறை தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் மின் விசிறி மற்றும் மேஜை கிடையாது. இருவருக்கும் கம்பளி வழங்கப்பட்டுள்ளது.
 
1 தட்டு, 1 கப் மற்றும் கைதிகளுக்கான சீருடை வழங்கப்பட்டுள்ளது. நீல கலரில் பார்டர் போட்ட வெள்ளை சேலையைத்தான் இருவரும் அணிந்து உள்ளனர். சசிகலா மற்றும் இளவரசி விருப்பப்பட்டால் சிறையில் வேலை பார்க்கலாம் ஆனால் கட்டாயம் கிடையாது.


இதில் மேலும் படிக்கவும் :