Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ.வை பின்பற்றும் சசிகலா ; பச்சை நிற சேலையில் தரிசனம்


Murugan| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:05 IST)
மறைந்த முதல்வர் ஜெ.வை பின்பற்றி அவரது தோழி சசிகலாவும் பச்சை நிற புடவையை அணிய தொடங்கியுள்ளார்.

 

 
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிமுக பொதுக்குழு இன்று காலை கூடியது. அதில் ஜெ.வின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்பின், போயஸ் கார்டன் சென்று, தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிடம் கொடுத்தார். அப்போது சசிகலா பச்சை நிற புடவை அணிந்திருந்தார். 
 
வழக்கமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, செண்டிமெண்டாக பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியின் போது பச்சை நிறப்புடவையை அணிவார். அவரைப் பின்பற்றி அதிமுக பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அதிமுக தொடர்பான நிகழ்ச்சிகளில் பச்சை நிற புடவையில் பவனி வருவார்கள்.
 
தற்போது அதை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவும் பின் தொடர தொடங்கியுள்ளார். இன்று காலை முதலே அவர் பச்சை நிற புடவையிலேயே அதிமுக தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.
 
இந்த விவகாரம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :