7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் சசிகலா!!


Sugapriya Prakash| Last Updated: ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (15:37 IST)
ஜெயலலிதா மறைவுக்கு அதிமுக கட்சி சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 
 
இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிடம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனிடையே தமிழக பொறுப்பு கவர்னர் நாளை திடீரென தமிழகம் வர உள்ளார். மேலும், அதிமுக அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர். 
 
அதன் பின்னர் சசிகலா தமிழக முதல்வராக போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது வரும் 7 ஆம் தேதி சசிகலா முதல்வர் பதவியேற்பார் என தெரிகிறது.
 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்திற்கு சசிகலா தரப்பில் இருந்து பதில் ஏதும் வராத நிலையில் இந்த தேதி ஆதிகாரப்பூர்வமானதா என்பது தெரியவில்லை.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :