சசிகலாவை மறைமுகமாக விமர்சனம் செய்து கமல் ட்வீட்!

Sasikala| Last Updated: வியாழன், 16 பிப்ரவரி 2017 (12:04 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைப்பெர்ற போராட்டத்தின் போது மானவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆதரவாக ட்வீட் போட்டு வந்தார் நடிகர் கமலஹாசன். பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலவரங்கள் குறித்தும் தன்னுடைய கருத்துகளை அவ்வபோது, புரிந்தும், புரியாதது போன்றும் ட்வீட் போட்டு வருகிறார்.

 
சசிகலாவுக்கும்,ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடையில் நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில் ஓ.பி.எஸ்க்கு கமல் தொடர்ந்து  ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், சசிகலாவை  மறைமுகமாக கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.

 
இதில் 107 செயற்கை உறுப்பினர்கள் என,கூவத்தூரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களையும்,செயற்கை உறுப்பினர்களை ஏவியவர் என சசிகலாவைவும் மறைமுகமாக கமல் தனது டிவிட்டர் பதிவில் விமர்சனம் செய்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :