ஆளுநரை மிரட்டும் சசிகலா: ஆளுநர் மாளிகையில் பலத்த போலீஸ் குவிப்பு!

ஆளுநரை மிரட்டும் சசிகலா: ஆளுநர் மாளிகையில் பலத்த போலீஸ் குவிப்பு!


Caston| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (17:44 IST)
ஆளுநரை மிரட்டும் வகையில் சசிகலா பேசியுள்ளார் என மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கூறியுள்ளார். சசிகலா இன்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசும்போது ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும் என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
முன்னதாக ஆளுநருக்கு கடிதம் எழுதிய சசிகலா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் கூறியிருந்தார். அதன் பின்னர் ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்கு முடியும், பின்னர் நாங்க செய்ய வேண்டியதை செய்வோம் என ஆவேசமாக கூறினார்.
 
இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா யாரை மிரட்டுகிறார்? ஆளுநரை மிரட்டுகிறாரா? என மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடலாம் தகவல் வருகிறது.
 
இதனால் பாதுகாப்பு கருத்தி ஆளுநர் மாளிகைக்கு பலத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கலவரம் வெடிக்கும் சூழல் இருப்பதால் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து குண்டர்கள் வந்து ஹோட்டலில் தங்கியிருக்கலாம் என சந்தேகித்து காவல்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :