Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்?; விடுதிகளில் போலீசார் சோதனை

சனி, 11 பிப்ரவரி 2017 (14:31 IST)

Widgets Magazine

சசிகலாவிற்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனால், சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த மன்னார் குடி தரப்பு முடிவெடுத்திருப்பதாகவும், அதற்காக ஆயிரக்கணக்கான ரவுடிகளை சென்னையின் பல்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளதாகவும், அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக எம்.எல்.ஏக்கள் 134 பேரின் ஆதரவும் தனக்கு இருப்பதால்,  தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கடந்த 8ம் தேதி ஆளுநரை சந்தித்து சசிகலா கோரிக்கை வைத்தார். ஆனால், இதுவரை ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.. 
 
இந்நிலையில், விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என சசிகலா, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், போயஸ் கார்டனில் இன்று அதிமுக தொண்டர்களுக்கு இடையே அவர் பேசிய போது ‘ ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்.. அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம்..” என எச்சரித்துள்ளார்.


 

 
இந்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காமல் போனாலோ, ஓ.பி.எஸ்-ஐ முதல்வராக அறிவித்தாலோ, கலவரத்தை ஏற்படுத்த சசிகலாவின் உறவினர்களான மன்னார்குடி கும்பல் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான ஆட்கள் வரவழைக்கப்பட்டு, சென்னையில் திருவல்லிக்கேனி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதை அறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி அறிக்கை தருமாறு, கமிஷனர் ஜார்ஜிடம் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, தற்போது போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
இந்த விவகாரம் சென்னைவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஓரளவிற்குதான் பொறுக்க முடியும்..செய்ய வேண்டியதை செய்வோம் - மிரட்டும் சசிகலா

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, அமைதியாக இருக்கிறோம். ஓரளவிற்குதான் பொறுமையாக இருக்க ...

news

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி இழக்க வாய்ப்பு: அடுத்த சட்ட சிக்கல்!

தமிழகத்தில் சசிகலா முதல்வராக ஆட்சியமைக்க உரிமை கோர இருந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ...

news

சசிகலாவுக்கு சம்மட்டியடி கொடுத்த மாஃபா பாண்டியராஜன்: ஓபிஎஸ் அணிக்கு தாவினார் அமைச்சர்!

தமிழக கல்வித்துறை அமைச்சரும் ஆவடி தொகுதி எம்எல்ஏவுமான மாஃபா பாண்டியராஜன் அதிரடி ...

news

பேனர் ரெடி...நினைவகம் ஆகிறதா ஜெ.வின் வீடு? - ஓ.பி.எஸ் அதிரடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவகமாக மாற்றும் ...

Widgets Magazine Widgets Magazine