Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. சமாதியில் 3 முறை சபதம் செய்த சசிகலா - மெரினாவில் பரபரப்பு


Murugan| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:58 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று சபதம் செய்து விட்டு அங்கிருந்து பெங்களூருக்கு கிளம்பி சென்றார்...

 

 
சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து, சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அவகாசம் தர முடியாது எனவும், உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறிவிட்டனர்.  
 
எனவே, கார் மூலமாக, பெங்களூருக்கு செல்ல சசிகலா உள்ளிட்ட மூவரும், போயஸ் கார்டனிலிருந்து தயராகினர். அந்நிலையில், ஜெ.வின் சமாதிக்கு சென்று, அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்து பெங்களூருக்கு அவர்கள் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியானது.
 
அதேபோல், சமாதிக்கு சென்ற சசிகலா, ஜெ.விற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, முனுமுனுத்தவாறே தனது கையால் ஜெ.வின் சமாதியில் அடித்து 3 முறை சபதம் செய்தார். இதுகண்டு அங்கிருந்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.  அதன் பின் சசிகலா அங்கிருந்து பெங்களூருக்கு கிளம்பி சென்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :