பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்ட சசிகலா : நிர்வாகிகளுடன் ஆலோசனை


Murugan| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (12:34 IST)
பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, அவரின் பதவியை ஏற்றுக்கொள்ள இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஏராளமான அதிமுகவினர் கூடியிருந்தனர்.

 

 
தொண்டர்களை பார்த்து வணங்கிய சசிகலா, அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அலுவலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மறைந்த  தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு அவர் உள்ளே சென்றார்.
 
அதன் பின், அதிமுக பொதுச்செயலாளர் இருக்கையில் அவர் அமர்ந்தார். அவரது அறையில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் தற்போது ஆலோசனை நடத்தினார். அதன் பின் அங்கிருந்த சில கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :