வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 4 ஜனவரி 2017 (16:22 IST)

சசிகலா பேனர் கிழிக்கப்பட்டதால் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

விழுப்புரம் அருகே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதிவியேற்றதை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டதால், சசிகலா ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து குடிநீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நிதிமூழ்கியனூர் கிராமத்தில் சசிகலா ஆதரவாளர்கள் அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றை வரவேற்று மகிழ்ச்சியுடன் பேனர்கள் வைத்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் சசிகலா எதிர்ப்பாளர்கள் சிலர் அவருடை புகைப்படம் உள்ள பேனர்களை கிழித்து வருகின்றனர்.
 
அதுபோல சிலர் அந்த பகுதியில் இருந்த பேனர்களை கிழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா ஆதரவாளர்கள் கிராமத்துக்கான குடிநீர் சேவையை நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கிராம மக்கள் அப்பகுதி ஒன்றிய ஆணையரிடம் தெரிவித்தனர். பின்னர் ஆணையர் சசிகலா ஆதரவாளர்களை சந்தித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார். சசிகலாவை விட அவரது ஆதரவாலர்கள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை.
 
பொதுச் செயலாலர் பதிவிக்கே இந்த ஆட்டம் என்றால், சசிகலா தமிழக முதல்வரான பிறகு என்ன நடக்குமோ? என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.