சசிகலா தரப்பு கார் மீது கல் வீச்சு: நீதிமன்றம் அருகே கலவரம்


Abimukatheesh| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:54 IST)
சசிகலா தரப்பு கார் மீது கல் வீசப்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட 6 வாகனங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

 

 
பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய சசிகலாவுடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. சசிகலா தரப்பு கார் மீது கல் வீச்சு நடந்துள்ளது. தமிழக பதிவெண் கொண்ட 6 வாகனங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. 
 
இதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த தாக்குதல் குறித்த காரணம் எதுவும் தெரியவில்லை. தமிழக வாகனங்கள் மட்டும் தான் தாக்கப்படுகிறா? அல்லது சசிகலா தரப்பு கார்கள் மட்டும் தாக்கப்படுகிறதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :