கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்: போலீஸ் அதரடி முடிவு


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:28 IST)
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

 

 
சசிகலா ஆதர்வு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ். சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சசிகலா ஆதர்வு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாங்கள் சொந்த விருப்பத்தில்தான் தங்கி உள்ளோம் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் சுமார் 10 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் செய்தியாளர்களிடம் பேடி அளித்துள்ளனர்.
 
மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. இன்று அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக தங்கியுள்ளதால் உடனே வெளியேறுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர்.
 
இதையடுத்து அவர்கள் அனைவரும் வெளியேற மறுப்பு தெரிவித்தனர். ஆயிரம் கணக்கில் காவல்துறையினர் மற்றும் அதிரடி படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் விடுதிக்குள் சென்று ஒவ்வொரு அறையாக சென்று அனைவரையும் வெளியேற வலியுறுத்தியுள்ளனர்.
 
அங்கிருந்த வெளியாட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இன்று இரவுக்குள் அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :